தருமபுரி மாவட்டம் அரூரில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கருப்பிலிப்பட்டி கிராமத்தில் தெரு நாய் கடித்து, ஒரு குழந்தை உள்பட 7க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தெருநாய்களின் தொல்லையால், அச்சத்துடன் வெளியே செல்வதாக கிராமத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர். எனவே பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் கால்நடைத்துறை, உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.