Friday, May 9, 2025

ஜம்மு எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் ஜம்முவில் எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news