பள்ளிக்குச் செல்லும்முன் 6 வயது சிறுவன் செய்த செயலைப் பாருங்க…

227
Advertisement

பள்ளிக்குச் செல்லும்முன் 6 வயது சிறுவன் தனது வேலைகளைத் தானே சுறுசுறுப்பாகக் செய்துமுடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக, 6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தங்களின் எல்லா வேலைகளுக்கும் பெற்றோரையே சார்ந்திருப்பார்கள். ஆனால், வீடியோவில் காணும் சிறுவனோ காலை 6 மணிக்கு எழுந்து சுத்தம் செய்வது முதல் சமைப்பது வரைத் தனது அன்றாட வேலைகளைத் தானே செய்கிறான்.

காலையில், அலாரம் அடித்தவுடன் படுக்கையிலிருந்து எழும் அந்தச் சிறுவன் அறையின் வெப்ப நிலைக்காக நெருப்பைப் பற்ற வைக்கிறான். தனது ஆடைகளை அயர்ன் பாக்ஸால் மடித்து வைக்கிறான். குப்பைகளை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடுகிறான்.

சமைப்பது, பல் துலக்குவது, சாப்பிடுவது, காலைக்கடன் கழிப்பது, சமைத்த, சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தம்செய்து அடுக்கி வைப்பது என ஒவ்வொரு வேலையாக சுறுசுறுப்பாகச் செய்துமுடித்து பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகிறான்.

வீடியோவிலுள்ள சிறுவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பது தெரியவில்லை. எனினும், சிறுவனின் செயல் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து வருகிறது.