செல்லப் பிராணிகளுக்கு 6 நட்சத்திர உணவகம்

246
Advertisement

செல்லப் பிராணிகளுக்கென்று 6 நட்சத்திர உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவிலுள்ள துறைமுக நகரமான கேப் டவுணில்தான் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.

Superwoof என்னும் பெயரில் அமைந்துள்ள இந்த சொகுசு விடுதியில் செல்லப் பிராணிகளுக்கு மிகப்பெரிய ஓய்வறை, நீச்சல் குளம் ஆகியவற்றுடன் 24 மணி நேரக் கண்காணிப்பு வசதி உள்ளது..

இங்கு செல்லப் பிராணிகளுக்கு பல் துலக்குதல், காது சுத்தம் செய்தல், பாதத்தை சுத்தம் செய்தல், குளிப்பாட்டுதல் போன்ற வசதிகள் உள்ளன.

அதுமட்டுமின்றி, இந்த விடுதி அருகே பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள கிராமத்தில் செல்லப் பிராணிகள் நடைப்பயணம் மேற்கொள்வதற்கான வசதிகளும் உள்ளன.

உற்சாக பானமும் உண்டாம்.
ஆனால், அது மூலிகைகளால தயாரிக்கப்பட்ட ஷாம்பெயின்.

செல்லப் பிராணிகளுக்கு ஓர் ஆடம்பரமான அனுபத்தை வழங்க விரும்புகிறோம் என்கிறார் இந்த 6 நட்சத்திர சொகுசு விடுதியின் நிர்வாகி ஒருவர்.

இங்கே எல்லா நாய்களும் வரலாமா…..?

ஒரே ஒரு நிபந்தனை…

இங்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்குமுன் செல்லப் பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதே அது.