ராஜபாளையத்தில் காவல் துறையினரை தாக்கிய விவகாரம் தொடர்பாக 6 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நேரு சிலை அருகே உள்ள தனியார் பாரில் கடந்த 10 ஆம் தேதி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அப்போது இளைஞர்கள் காவலர்கள் வைத்திருந்த லத்தியை பறித்து காவலர்களை கடுமையாக தாக்கினர்.
தகவலறிந்து வந்த சிறப்பு படை போலீசார், காயமடைந்த தலைமை காவலர்கள் இருவரையும் மீட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து கீழஆவாரம்பட்டி தெருவை சேர்ந்த 10 இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்வர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீசார், பால்பாண்டி, பாஞ்சாலி , தர்மலிங்கம், வெள்ளையன், கருப்பசாமி, முத்துராஜ், மணிகண்டன் ஆகிய 6 பேரும் மாவட்ட எஸ் பி மற்றும் ஆட்சியர் ஜெயசீலன் ஆகியேரின் பரிந்துரையின் பெயரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.