பெற்றோர்களால் கடத்தப்பட்டு படிக்கட்டு கீழ் அடைக்கப்பட்ட 6 வயது சிறுமி!

247
Advertisement

2019-ஆம் ஆண்டு காணாமல் போன இளம்பெண் ஒருவர் படிக்கட்டுக்கு அடியிலிருந்த ரகசிய அறையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இப்போது 6 வயதாகும் பைஸ்லி ஷுல்டிஸ், திங்கள்கிழமையன்று நடந்த தேடுதலுக்குப் பிறகு சாகெடீஸ் நகரிலுள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும் இப்போது அவருடைய சட்டப்பூர்வ பாதுகாவலர் மற்றும் மூத்த சகோதரியுடன் மீண்டும் இணைந்துள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவருக்கு சட்டப்பூர்வ பாதுகாவலராக இல்லாத பெற்றோர் அவருடைய காவலில் குறுக்கீடு செய்ததாகவும் குழந்தையின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியூயார்க்கில் உள்ள தியோகா என்ற மாவட்டத்தில் இருந்து பைஸ்லீ காணாமல் போனதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது. அப்போது அவருக்கு நான்கு வயது.

அவருடைய பெற்றோரான, 33 வயதான கிம்பர்லி கூப்பர் மற்றும் 32 வயதான கெர்க் ஷுல்டிஸ் ஜூனியர் ஆகியோரால் அவர் கடத்தப்பட்டதாக அந்த நேரத்தில் அதிகாரிகள் நம்பினர்.

உல்ஸ்டர் மாவட்டத்தில் உள்ள ஒரு மறைவான இடத்தில் பைஸ்லி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் வீட்டைச் சோதனையிட வாரன்ட் பெற்று, சோதனை நடத்தப்பட்டது.

, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த தேடுதலில், வீட்டின் அடித்தளத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் விசித்திரமாகக் கட்டப்பட்டிருப்பதைக் கவனித்தனர்.

பல பலகைகளை அகற்றிய பிறகு, “சிறிய, குளிர் மற்றும் ஈரமான” அடைப்பு என்று காவல்துறை விவரித்த இடத்தில் பைஸ்லீ மற்றும் திருமதி கூப்பார் மறைந்திருந்ததை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பைஸ்லியை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்து அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

பைஸ்லீயின் உயிரியல் பெற்றோர், அவர் மீதும் அவருடைய மூத்த சகோதரி மீதுமான சட்டப்பூர்வ காவலை இழந்துள்ளனர். அதுவே பைஸ்லீயை கடத்தியதன் பின்னணியில் இருப்பதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.