Friday, December 5, 2025

தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைத்து ரீல்ஸ் எடுத்த 5 பேர் கைது

சென்னையிலிருந்து கடந்த நவ. 9-ஆம் தேதி காரைக்குடிக்கு சென்ற பல்லவன் அதி விரைவு ரயில் திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் ஏற்பட்ட அதிா்வால் வழியில் நிறுத்தப்பட்டது.

இது குறித்து திண்டிவனம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், திண்டிவனம் பகுதிகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அபிஷேக்குமாா், ஆகாஷ் குமாா், பாபுலால்குமாா், தீபக்குமாா், ராஜாராம் ஆகியோா் கடந்த நவ. 9- ஆம் தேதி மேல்பாக்கம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் அமா்ந்தபடி மது அருந்தியதும், அப்போது அவா்கள் ரயில் பாதையில் இரும்புத் துண்டுகளை வைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து திண்டிவனம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் 5 பேரையும் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். அவா்கள் ரயிலை கவிழ்க்க சதி செய்தாா்களா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News