Wednesday, March 26, 2025

சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கொடுக்காமல் தகராறு – 5 பேர் கைது

மறைமலைநகரில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கொடுக்க மறுத்து கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த உரிமைநாதன் என்பவர், பாவேந்தர் சாலையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இங்கு கடந்த 23ம் தேதி வந்த 2 இளைஞர்கள், பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் தராமல் செல்ல முயன்றுள்ளனர்.

பணம் கேட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் 3 நண்பர்களை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், காட்டாங்கொளத்தூரை சேர்ந்த சச்சின், சந்துரு, சூர்யா,தினேஷ் மற்றும் சுபீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Latest news