5 கணவர் ஒரு மனைவி

419
Advertisement

கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா?
ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதுதானே பண்பாடு..?
ஆனால், இமயமலைப் பகுதிகளில் ஒரே பெண்ணை பல ஆண்கள்
மணந்துகொள்ளும் வழக்கம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.

இமயமலையிலிருந்து வெகுதொலைவில் உள்ளது ராஜு வர்மா
என்னும் கிராமம். இப்பகுதியில்தான் இந்த விநோதம் அரங்கேறி
உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் அதிக எண்ணிக்கையில்
வாழ்ந்துவருகின்றனர்.

இந்த சமூகத்தில் ஒரே பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள்
மணந்துகொண்டு குடும்பம் நடத்தும் விநோத வழக்கம் உள்ளது.

இந்த சமூக வழக்கப்படி, 2021ஆம் ஆண்டில் ஒரு பெண், ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த 5 சகோதரர்களைத் திருமணம் செய்து
உள்ளார். தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஒவ்வொரு நாள் இரவிலும் யார் தன்னுடன் உறங்கவேண்டும்
என்பது இந்தப் பெண்ணின் விருப்பமாம்.

இதுவரை இவர்களிடம் குழப்பமோ சண்டையோ ஏற்படவில்லை
என்கிறார்கள் இக்கிராம வாசிகள்.

இதேபோல், மற்றொரு பெண் இரண்டுபேரைத் திருமணம்
செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ”நான் மிகவும்
அதிர்ஷ்டசாலி. ஒரு கணவர் சமைக்க உதவுகிறார். மற்றொரு
கணவர் வேலைக்குச் சென்று வருகிறார்” என்கிறார்.

இரண்டு சகோதரர்களைத் திருமணம் செய்துள்ள, தற்போது
70 வயதாகும் பெண் இரண்டுபேரைத் திருமணம் செய்து
கொண்டதைப் பூரிப்புடன் கூறுகிறார். ”ஒரு கணவர் இறந்து
விட்டார். இன்னொரு கணவருடன் வாழ்ந்துவருகிறேன். எங்களின்
பாரம்பரியப்படி பல நூற்றாண்டுகளாகப் பல ஆண்களைத்
திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் உள்ளது.

பெரும்பாலும் சகோதரர்களையே திருமணம் செய்வோம்.
இதனால் சொத்துகளைத் தனித்தனியாகப் பிரித்துக்கொடுக்க
வேண்டிய அவசியம் ஏற்படாது. இதேபோன்று எங்கள் கிராமத்தில்
பல குடும்பங்கள் உள்ளன. அனைவரும் சந்தோஷமாக வாழ்கிறோம்”
என்கிறார்.

கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும்
சொத்துகள் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஒன்றுக்குமேற்பட்ட
ஆண்களைத் திருமணம் செய்துகொள்வது சரியான பண்பாடல்ல.
நோய் பரவுதல், குழப்பம் போன்றவை ஏற்படுவது மட்டுமன்றி,
சந்ததியினருக்கு வெளியுலகத்தோடு தொடர்புகொள்ளும்போது
ஏற்படும் அவமானங்கள், கேலிகிண்டல் போன்றவ சொல்லி மாளாது.

நேர்வழியில் சம்பாதிப்பதற்கும் சேமிப்பதற்கும் எண்ணற்ற வழிகள்
உள்ளன. உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்ட இக்காலத்தில்
பல ஆண்களை ஒரே பெண் திருமணம் செய்வது ஏற்புடையதல்ல.