இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளையும், இந்திய அணி 1 போட்டியையும் வென்றுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் தற்போது 2-1 என இருக்கிறது. மான்செஸ்டரில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியையும் வெல்லும் பட்சத்தில், இங்கிலாந்து 3-1 என தொடரினை கைப்பற்றி விடும்.
இதனால் 4வது டெஸ்ட் போட்டியை, வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் வெற்றியை மனதில் வைத்து இந்திய அணியில், 5 முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கருண் நாயர் தொடர்ந்து சொதப்புவதால் அவருக்கு பதிலாக மீண்டும், தமிழக வீரர் சாய் சுதர்சன் பிளெயிங் லெவனில் இடம் பெறலாம் என்று தெரிகிறது. இதேபோல மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு இடமளிக்க முடிவு செய்துள்ளனராம்.
வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் மிகுந்த சோர்வாக காணப்படுவதால், அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இடதுகை பவுலர் அர்ஷ்தீப் சிங்கை அணியில் சேர்க்க உள்ளனராம். இதேபோல 3 டெஸ்டில் மட்டும் தான் ஆடுவேன் என ரூல்ஸ் போட்டு வாழும் பும்ரா மற்றும், காயத்தால் அவதிப்படும் துணை கேப்டன் ரிஷப் பண்ட் இருவரையும் நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக துருவ் ஜுரல், பிரசித் கிருஷ்ணாவை பிளேயிங் லெவனில் கொண்டுவர உள்ளனராம்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ” கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும். இதுக்கு பருத்திமூட்டை குடோன்லேயே இருக்கலாம்,” என்று விதவிதமாக கிண்டலடித்து வருகின்றனர்.