மன்னார் மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் ஆயிர்த்து 500-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரத்தை சேர்ந்த 47 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். இலங்கை கடற்படையின் அத்துமீறிய இந்த நடவடிக்கையால், ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.