இந்த 2025ம் ஆண்டு விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 திரைப்படங்கள் ரிலீஸ். பத்ம பூஷண் விருது, கார் ரேஸ்களில் வெற்றி என்று, நடிகர் அஜித் குமார் தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருக்கிறார். அத்துடன் பல ஆண்டுகளாக ஊடகங்களைத் தவிர்த்து வந்த அஜித், தற்போது நேரம் ஒதுக்கி ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்து வருகிறார்.
இந்தநிலையில் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் அப்டேட்களை அள்ளித் தெளித்திருக்கிறார். எதிர்காலம் குறித்து அஜித், ” கடந்த 8 மாதங்களில் சுமார் 42 கிலோ எடை குறைத்துள்ளேன். இதற்கு நான் டீடோட்டலராக மாறியதும், சைவ உணவுமே முக்கிய காரணமாகும். ரேஸிங் சீசனில் படம் நடிக்க மாட்டேன்.
எனது அடுத்த படம் நவம்பரில் துவங்கி, 2026 கோடை விடுமுறைக்கு வெளியாகும். இனி வருடத்துக்கு ஒரு படம் தான்,” என்று ஓபனாக பேசியுள்ளார். AK 64 படத்தை லக்கி பாஸ்கர் புகழ் வெங்கி அட்லூரி இயக்கவுள்ளதாகத், தகவல்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.