மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தை, தவறுதலாக ஜன்னல் வழியாக வெளிப்புறத்தில் உள்ள தடுப்பு கம்பியில் தொங்கியபடி இருந்துள்ளது.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலரும், சில குடியிருப்பு வாசிகளும் விரைந்து வந்து, குழந்தையை பாதுகாப்பாக கீழே இறக்க முயன்றனர்.
சில நிமிடங்களில் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவர்கள், குழந்தைக்கு சிறிய சிராய்ப்புகள் உள்ளதே தவிர பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.