Tuesday, January 28, 2025

சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை செய்து வருகிறார்.

இந்நிலையில் அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்ததாக சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் பிரசாரம் செய்தல், சட்டவிரோதமாக கூடுதல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் என மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest news