126 பேரக் குழந்தைகள், 28 மனைவிகள் முன்னிலையில்
37 ஆவது திருமணம் செய்த நவீனக் கல்யாண மன்னன்

167
Advertisement

இந்தக் காலத்தில் ஒரு திருமணம் செய்து குடும்பம்
நடத்துவதே இமாலய சாதனையாக உள்ளது. ஆனால்,
135 பிள்ளைகள், 126 பேரக் குழந்தைகள், 28 மனைவிகள்
இருக்கும்போது 37 ஆவதாகத் திருமணம் செய்து
அசத்தியுள்ளார் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த
முதியவர் ஒருவர்.

ஏற்கெனவே 36 திருமணம் செய்த இவருக்குத்
தற்போது 28 மனைவிகள் உள்ளனர். மற்றவர்கள்
இறந்துவிட்டனர்.

உயிருடன் உள்ள மனைவிகள், மகன்கள், மகள்கள்,
பேரன்கள், பேத்திகள் முன்னிலையில் 37ஆவது
திருமணத்தை வெற்றிகரமாக 2021, ஜுன் 6 ஆம்
தேதி செய்துள்ளார் இந்த முதியவர்.

மன்னர்கள் காலத்தில் கணக்கில்லா திருமணம்செய்து
ஏராளமான குழந்தைகளைப் பெற்றெடுத்ததைப் பற்றிப்
படித்திருக்கிறோம். தற்போது சட்டரீதியாக இது சாத்தியமில்லை.
பொருளாதார ரீதியாகவும் சாத்தியமில்லை.

ஒரு திருமணம் செய்து குடும்பம் நடத்துவதற்கே
பொருளாதார ரீதியாகப் பலர் திணறுகின்றனர்.
இந்த நிலையில் பெரியவரின் தைரியமான இந்தச்
செயல் திருமணமாகாத இளைஞர்களை ஏக்கப்
பெருமூச்சு விடவைத்துள்ளது