குழந்தை வயிற்றில் 36 காந்த உருண்டைகள்

131
Advertisement

ஒரு குழந்தையின் வயிற்றில் 36 காந்த உருண்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவை ஒன்றுசேர்ந்து மாலைபோல உருவாகி
குழந்தையின் வயிற்றில் ஓட்டைகளை ஏற்படுத்தியுள்ளன.

சீனாவில் உள்ள ஸெஜியாங் மாகாணத்தில் ஒரு வயதுள்ள குழந்தைக்கு திடீரென்று
வாந்தியும் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்
மருத்துவனைக்கு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது
வயிற்றில் மாலைபோன்று வட்டவடிவில் இருந்துள்ளது.

அறுவைசிகிச்சைமூலம் அதனை அகற்றியபோது அவை காந்த உருண்டைகள் என்பது
தெரியவந்தது. அதில் 36 காந்த உருண்டைகள் இருந்தது. காந்த உருண்டையைக் குழந்தை
ஒவ்வொன்றாக எடுத்து விழுங்கியுள்ளது. பெற்றோர் அதனைக் கவனிக்கவில்லை.

Advertisement

காந்த உருண்டை என்பதால் ஒன்றோடொன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டது. அவை குடலில்
திசு அரிப்பை ஏற்படுத்தியதால் ஓட்டைகள் விழுந்துவிட்டன. பித்த நீர் சுரப்பு அதிகமானதால்
உடல்நலமும் குன்றிவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் அலட்சியத்தால் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இணையத்தில்
விவாதங்கள் கிளம்பியுள்ளன.