உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில், சுமார் 31 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரயாக்ராஜில் புனித நீராடுவதற்காக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். இதனால் கடும் கூட்ட நெரிசலாகி தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட தடுப்புகளை உடைத்துக்கொண்டு பக்தர்கள் நீராட முயன்றனர். இந்த சம்பத்தில், சுமார் 31 பேர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.