Sunday, July 6, 2025

நா.த.க.வில் இருந்து வெளியேறிய 3000 பேர் திமுகவில் இணைய முடிவு?

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் கிளம்பியது. தமிழநாடு முழுவதும் சீமான் மீது வழக்கு பதிவு செய்யயப்பட்டது.

அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் நேற்று சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 3000 பேர் வெளியேறியுள்ளனர். 2021 சட்டசபை தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நா.த.க. வேட்பாளர்களும் கட்சியில் இருந்து விலகினர். நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news