கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தெரு நாய் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓசூர் அடுத்த மாசி நாயக்கனப்பள்ளியில், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ரேகா – நந்தலால் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் மூன்றரை வயது மகனான சத்யா என்பவரை, அவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு நாய் கடித்து குதறியுள்ளது.
இதில், சிறுவன் படுகாயத்துடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தெரு நாய்களின் தொடர் அத்துமீறலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.