கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், 10 குழந்தைகள் உட்பட 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் உள்பட 4 பேர் மீது கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இதில், மதியழகன் மற்றும் தவெக மத்திய மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். இதனிடையே புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இவர்களது மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.