சென்னை பல்லாவரத்தில் கஞ்சா கடத்தியதாக ஒடிசாவை சேர்ந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை அருகே கஞ்சா கடத்தப்படுவதாக தாம்பரம் அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த வடமாநில நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த பிஸ்ரபா பல்வர்சிங் (26), சந்தன் பலியர்சிங் (27), அஞ்சனா டிகல் (40), என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.