சிறுத்தையைத் தவிக்கவிட்ட 3 கால் மான்

50
Advertisement

தன்னை வேட்டையாட வந்த சிறுத்தையைத் தவிக்கவிட்ட
மானின் வீடியோ இணையத்தைக் கவர்ந்துவருகிறது.

இதுதொடர்பான வீடியோ ஒன்றை இந்திய வனத்துறை
அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்டுவிட்டர் பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.

வனவிலங்குள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட அந்த
வீடியோவில் 3 கால்கள் மட்டுமே உள்ள ஒரு மான்
புல்லை மேய்ந்துகொண்டிருக்கிறது. அதனைக்கண்ட
சிறுத்தை ஒன்று பதுங்கிப் பதுங்கி அதனருகே வந்து
வேட்டையாட முயற்சிசெய்கிறது.

Advertisement

மானோ அதுபற்றி சிறிதும் பயம்கொள்ளாமல்,
பதற்றம் அடையாமல் புல் மேய்வதிலேயே கவனமாக உள்ளது.

மானுக்கும் சிறுத்தைக்கும் நடுவே கம்பி வேலி இருப்பதால்,
சிறுத்தையால் மானை வேட்டையாட முடியவில்லை. அதேசமயம்,
வேலியைத் தாவிக்குதித்து வேட்டையாடும் சிந்தனையும்
சிறுத்தைக்கு வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

பாதுகாப்புக் கோட்டைக்குள் இருந்தால், எந்த வல்லவனுக்கும்
பயப்படவேண்டியதில்லை என்று நெட்டிசன்கள் இந்த வீடியோக்
காட்சியை வர்ணித்து வருகின்றனர்.