தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான கஞ்சா கருப்பு சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கஞ்சா கருப்பு 3 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும், வீட்டை வேறு ஒரு நபருக்கு உள்வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடப்பதாகவும் வீட்டை லாட்ஜாக மாற்றிவிட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.