செப்டம்பர் மாதம், முதல் வாரத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்படவுள்ளதால் மாணவர்கள் holiday வரவுள்ள மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டன. ஜூன், ஜூலை மாதங்களில் அரசு விடுமுறை எதுவும் இல்லாமல் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் நிர்பந்தம் இருந்தது.
ஆனால் ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஏனென்றால் சுதந்திர தினம், பிள்ளையார் சதூர்த்தி என வார நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அவர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் குறிப்பாக சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை வந்தால் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் மாணவர்களின் பெற்றோர்களும் விடுமுறை நாட்களுக்கு ஏற்றார்போல் picnic, சின்ன trip என Plan போட்டனர்.
அதை தொடர்ந்து இந்த மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் மாணவர்கள் மீண்டும் சந்தோஷத்தில் உள்ளனர். அதாவது, செப்டம்பர் 5ம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிலாடி நபி வெள்ளிக்கிழமையில் வருவதால் அதற்கு அடுத்த நாட்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள். இதனால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கவனத்தில்கொண்டு பெற்றோர்கள் இப்பொழுதே வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடலாம்.
காலாண்டு தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்பு இது. விடுமுறை கொண்டாட்டத்தை முடித்தப்பின் மாணவர்கள் காலாண்டு தேர்வுக்கு உற்சாகமாக தயாராக இது வசதியாக இருக்கும்.