பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தில் நடந்த முதுநிலை பட்டப்படிப்பு மூன்றாவது செமஸ்டர் தேர்வில், 100 மதிப்பெண்கள் கொண்ட பாடத்திற்கு 257 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேபோல், 30 மதிப்பெண்கள் கொண்ட செய்முறை தேர்வில் 225 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதில் பல மாணவர்கள் குழப்பம் மற்றும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் ராம்குமார், “மதிப்பெண்கள் எக்ஸல் சீட்டில் உள்ளிடும் போது ஏற்பட்ட தவறுகளால் இந்த குழப்பம் ஏற்பட்டது.
புகார் வந்ததும் உடனடியாக விசாரணை நடத்தி, பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. இனி மதிப்பெண்கள் வெளியீட்டிற்கு முன் இருமுறை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.