வாடகை கொடுத்தே கட்டுபடியாகல… அதனால சொந்த வீடு
வாங்கிக்கொள்வோம் என்கிற மனநிலையில் பலரும் உள்ளனர்.
சொந்த வீடு வாங்குவதெனில், பல லட்ச ரூபாய் இருந்தால்தான்
முடியும். ஆனால், ஒரு குறிப்பிட்ட ஊரில் குடியேறினால் 25 லட்ச
ரூபாய் வழங்குவதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
இத்தாலி நாட்டின் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது கலாப்ரியா
என்னும் கிராமம். தற்போது 2 ஆயிரம்பேர் இக்கிராமத்தில் வசித்து
வருகின்றனர். இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் திடீரென்று வெளியேறத்
தொடங்கினர். இதனால், கிராமமே காலியாகத் தொடங்கிவிட்டது.
இப்படியே போனால் கிராமம் என்கிற நிலை மாறி, காடு என்னும்
நிலை ஏற்பட்டுவிடும் என்று கருதிய அந்நாட்டு அரசு கிராமத்துக்குப்
புத்துயிர் ஊட்ட விரும்பியது.
இதற்காகக் கிராமவாசிகளைத் திரும்பவும் அங்கு குடியேற ஊக்குவிக்கும்
திட்டம் ஒன்றை அறிவித்தது. அதாவது, கலாப்ரியா கிராமத்தில் தொழில்
தொடங்குவோருக்கு 25 லட்ச ரூபாய் இலவசமாக வழங்கப்பபோவதாக
அறிவித்தது.
ஆனால், ஒரே ஒரு கண்டிஷன் போட்டது. அதாவது, அங்கு குடியேற
விரும்புபவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்களாகவும், 90 நாட்களுக்குள்
கலாப்ரியா கிராமத்தில் குடியேறி சொந்தத் தொழில் தொடங்குபவர்களாகவும்
இருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.
நல்ல விசயம். கரும்பு தின்னக் கூலியா என்று கேட்கிறார்கள் இங்குள்ளவர்கள்.
நம் நாட்டிலும் இப்படி ஓர் அறிவிப்பு வந்தால் எப்படியிருக்கும்?