சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.14,850-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,800-க்கும் விற்பனையானது. இதையடுத்து சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,950-க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1,19,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,030-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனையாகிறது. கடந்த 15-ந்தேதியிலிருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,75,000 ஆக உள்ளது. கடந்த 15-ந்தேதியிலிருந்து வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
