22.09.2026; தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்… இன்றைய விலை நிலவரம்…

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 16-ந்தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும், ஒரு கிராம் ரூ.14,065-க்கும் விற்பனையானது.

17-ந்தேதி சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கும் விற்பனையானது.

18-ந்தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, சவரனுக்கு ரூ.1,160 அதிகரித்து ரூ.1,13,240-க்கும், கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

19-ந்தேதி சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கும், கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கும் விற்பனையானது. 20-ந்தேதி இதே விலை நீடித்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கும், ஒரு கிராம் ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

Related News

Latest News