முதல்ல நட்பாம்…அப்புறம் காதலாம்…அப்புறம் கல்யாணமாம்…

36
Advertisement

51 வயது ஆணும் 21 வயது இளம்பெண்ணும்
காதல் திருமணம் செய்யவுள்ளனர்.

நாளிதழ்களில் அவ்வப்போது 10ஆம் வகுப்பு மாணவனைப்
பள்ளி ஆசிரியைக் காதலிப்பதும், இருவரும் தனிக்குடித்தனம்
நடத்துவதும் நம்ம ஊர் நாளிதழ்களில் செய்தியாக வந்துள்ளன…

ஆனால், அமெரிக்காவில் வேறு ரகம்..

Advertisement

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியைச் சேர்ந்தவர்
பிராண்டன் வேட். 51 வயதாகும் கோடீஸ்வரரான இவருக்கு
இளம்பெண்கள்மீது மோகம் வந்துவிட்டது. தன்னுடைய
ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அதிகம் சிரமப்படவில்லை.

புதியதாக DATING APP ஒன்றை உருவாக்கினார். அதில் 40
வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களும்
மட்டுமே பதிவுசெய்ய முடியும்.

முதல்ல நட்பாம்…அப்புறம் காதலாம்…அப்புறம் கல்யாணமாம்…

இது அங்குள்ளவர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டதாம்.
அதாவது, வயதான ஆண்கள்மீது மோகம்கொண்ட இளம்பெண்களுக்கும்,
இளம்பெண்கள்மீது மோகம்கொண்ட வயதான ஆண்களுக்கும்.

சட்டென்று பிரபலமடைந்துவிட்டது இந்த டேட்டிங் ஆப்.

தான் விரித்த வலையில் பிராண்டன் வேட் விழுந்தார். 21 வயது
இளம்பெண்ணான டானா ரோஸ்வெல்லுடன் பழகத் தொடங்கினார்…
நட்பானார்…பழம் நழுவிப் பாலில் விழுந்தது.

அப்புறமென்ன…

இருவரும் காதல் வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினர்..

நட்பு காதலாகிக் கசிந்துருகி நிச்சயதார்த்தத்தில் முடிந்துவிட்டது.

கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட
இந்த தாத்தாவும் பேத்தியும் சாரி…இந்தக் காதலர்கள் இருவரும்
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் திருமணம் செய்ய உள்ளார்களாம்…
தாத்தாவுக்கு இது நாலாவது கல்யாணமாம்.

1985 ஆம் ஆண்டில் வெளியான ஆண்பாவம் பாடத்தில் இடம்பெற்றுள்ள
நடிகர் பாண்டியராஜனின் காதல் கசக்குதய்யா….வரவரக் காதல்
கசக்குதய்யா…பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

உங்களுக்கு?