Saturday, December 6, 2025

2025ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு!!

2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 06 தேதி முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 07ம் தேதி, 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 08ம் தேதி வேதியியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,அக்டோபர் 09ம் தேதி,இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவிற்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மோய்கிர் {Joel Mokyr}, பிலிப் அகியோன் {Philippe Aghion}, பீட்டர் ஹோவிட் {Peter Howitt} ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News