விஜய்க்கு 200 கோடி.. எனக்கு இவ்ளோ தானா.. டென்ஷனான தளபதி 68 இயக்குநர்?

225
Advertisement

தளபதி 68 பட வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் பெரிய தொகை சம்பளமாக கிடைக்கும் என இயக்குநர் வெங்கட் பிரபு கட்டியிருந்த மனக்கோட்டை எல்லாம் சுக்கு நூறாக உடைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 68வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், வெங்கட் பிரபுவுக்கு இந்தப் படத்தை இயக்கியவர் எத்தனை கோடி சம்பளமாகப் பேசுகிறார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமாவில் என்ன தான் இயக்குநரை கேப்டன் ஆஃப் தி ஷிப் என்று சொன்னாலும், அதிக சம்பளம் இயக்குநருக்கு ஒரு போதும் தருவதில்லை. அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் யாருக்காக வருகிறார்களோ அந்த ஹீரோவுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.

ஹீரோவை தொடர்ந்து இசையமைப்பாளருக்கும் அதன் பிறகு தான் இயக்குனருக்கான சம்பளம் என்றும் ஹீரோயின்களைப் பொறுத்தவரை பெரிய நடிகைகளுக்கு ஒரு சம்பளமும் இளம் ஹீரோயின்களுக்கு குறைவான சம்பளமும் வழங்கப்படுகிறது.

டிசி நிறுவனமே டுவைன் தி ராக் ஜான்சனுக்கே அதிகபட்சம் 186 கோடி ரூபாய் தான் பிளாக் ஆட்டம் படத்திற்கு கொடுத்ததாக கூறப்படும் நிலையில், நடிகர் விஜய்க்கு தளபதி 68ல் 200 கோடி ரூபாய் சம்பளமாம்.

இந்நிலையில், விஜய்க்கு 200 கோடி சம்பளம் கொடுக்கிறாங்களே நமக்கு ஒரு 10 பர்சன்ட் 20 கோடியாவது கொடுப்பாங்க என கனவு கண்டு கொண்டிருந்த வெங்கட் பிரபுவுக்கு இந்த படத்தை இயக்க வெறும் 10 கோடி ரூபாய் தான் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளன.