Monday, January 20, 2025

அரசு பேருந்தில் மது பாட்டில்களை கடத்தி வந்த 2 பெண்கள் கைது

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் திருவாரூர் நகர காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நாகப்பட்டிணத்திலிருந்து திருவாரூர் வந்த அரசுப் பேருந்தில் சோதனை செய்த போலீசார், நாகப்பட்டினம் பாப்பா கோயில் பகுதியை சேர்ந்த திவ்யா மற்றும் தீபா ஆகியோரின் உடமைகளில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்களை கடத்தி வந்த இரு பெண்களையும் போலீசார் கைது செய்த நிலையில், இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Latest news