அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்த 25 சதவீத விரி விதிப்பு காரணமாக, இந்திய ஆடை மற்றும் ஜவுளித் தொழில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும், ஆடை தயாரிப்பு துறை, குறிப்பிடத்தக்க சரிவை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டிருப்பதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே நூல் விலை உயர்வு, செலவினங்கள் அதிகரிப்பு என பல சவால்களை சந்தித்துவரும் இந்தத் துறையை 25 சதவீத வரி, பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் அபாயத்தில் உள்ளது.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்ந்தால், நாட்டின் ஆடைத் தயாரிப்பு துறை மட்டுமே மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும், இது, வேலை வாய்ப்புகளைக் குறைத்துவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.