சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது நபூல் (20), சபீர் அகமது (20) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.