Friday, February 14, 2025

கள்ளக்குறிச்சியில் வாகன ரேஸில் ஈடுபட்ட 2 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் பகுதியில் இருந்து ஆவியூர் வரை 3 இளைஞர்கள் இருசக்கர வாகன ரேஸில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, மோகன்ராஜ், ஹரிஷ் ஆகிய இருவரும் அதிவேகமாக சென்றதால், நிலை தடுமாறு கீழே விழுந்தனர். இதில், பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news