Sunday, June 22, 2025

கோயம்பேட்டில் கார் டயர் வெடித்ததில் 2 பேர் காயம்

கோயம்பேட்டில் கார் டயர் வெடித்து, சாலையோர கடைக்குள் புகுந்து விபத்திற்குள்ளானதில் 2 பெண்கள் காயமடைந்தனர்.

சென்னை அண்ணாநகரில் இருந்து முகலிவாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக துல்கர் கான் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோயம்பேடு அருகே சென்றபோது காரின் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பழக்கடைக்குள் புகுந்தது.

இதில், பழ விற்பனையில் ஈடுபட்டிருந்த லட்சுமி மற்றும் சுகன்யா ஆகிய 2 பெண்கள் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு பெண்களையும் வீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news