கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 255 MBBS மாணவ, மாணவியர் மீது தேசிய மருத்துவ கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த 4ஆம் தேதி நடந்த நீட் தேர்விலும் மோசடி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
போலி ஹால் டிக்கெட் தயாரித்து பீகாரில் நடந்த நீட் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக பேகுசராய் மாவட்ட சிறையில் பணியமர்த்தப்பட்ட ஒரு மருத்துவர் உட்பட இரண்டு பேர், பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். மேலும் விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதில், போலியாக நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் கொடுத்தததையும் ஒப்புக்கொண்டனர். மேலும் இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.