Tuesday, December 23, 2025

சிவகங்கை அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாங்குடி பாலாற்று பகுதியிலும், அருகிலுள்ள தனியார் நிலங்களிலும் இரவு நேரங்களில் மணல் கொள்ளை அடிக்கடி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஆற்றுப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அரசு அனுமதியில்லாமல் மணல் அள்ளிக்கொண்டிருந்த ஆனந்த கண்ணன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் திருட பயன்படுத்திய ஜேசிபி , டிராக்டர், ஈச்சர் ஆகிய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Related News

Latest News