Tuesday, December 3, 2024

உக்ரைனுக்கு உதவி செய்யும் 19 நாடுகள்

தனியொருவனாக ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வரும்
உக்ரைனுக்குப் பல்வேறு நாடுகள் பல்வேறு உதவிகளைச்
செய்து வருகின்றன. எந்தெந்த நாடுகள் என்னென்ன
உதவிகளைச் செய்தன என்பதைப் பார்க்கலாம்.

சுவீடன்: தொழில்நுட்ப உதவியும் ராணுவ ரீதியிலான உதவியும் செய்து முதல் நாடு என்ற பெருமையைத் தட்டிச்சென்றுள்ளது.

அமெரிக்கா: ஏற்கெனவே 600 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ள நிலையில், மேலும் 350 மில்லியன் டாலர் நிதியுதவி. தற்போது 54 மில்லியன் டாலர் உதவி செய்யப்படும் என்று அறிவிப்பு.

கனடா: 7.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள சக்தி வாய்ந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் 500 மில்லியன் டாலர் கடன் உதவி

பிரிட்டன்: பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி

பிரான்ஸ்: 300 மில்லியன் யூரோ மதிப்புள்ள போர் ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள் மற்றும் எரிபொருள்

ஜெர்மனி: 1000 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் 500 ஸ்டிங்கர் ஏவுகணைகள், 14 ராணுவ வாகனங்கள் மற்றும் 10 ஆயிரம் டன் எரிபொருள்

ஜப்பான் 100 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பெல்ஜியம்: 3 ஆயிரம் தானியங்கித் துப்பாக்கிகள், 200 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 3,800 டன் எரிபொருள்.

ஸ்பெயின்: மருந்துப் பொருள்கள், குண்டு துளைக்காத உடைகள் உள்ளிட்ட 20 டன் பொருள்கள்

இத்தாலி: 123 மில்லியன் டாலர் நிதியுதவி

போர்ச்சுகல்: இரவில் பார்க்க உதவும் கண்ணாடிகள், குண்டு துளைக்காத உடைகள், வெடிபொருள்கள் மற்றும் தானியங்கி 3ஜி துப்பாக்கிகள்

ருமேனியா: போரில் காயம் அடையும் உக்ரைன் வீரர்களுக்கு 11 ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் 3.3 மில்லியன் டாலர் மதிப்பிலான உபகரணங்கள்.

இஸ்ரேல்: மருந்துப் பொருள்கள், குடிநீர் சுத்திகரிப்பான், கூடாரங்கள் உள்ளிட்ட 100 டன் உதவிப் பொருள்கள்.

நெதர்லாந்து: ஸ்னைபர் துப்பாக்கிகள் அனுப்பியுள்ள நிலையில், 200 ஸ்டிங்கர் ஏவுகணைகள் விரைவில் அனுப்ப உள்ளது. 22 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிப் பொருள்கள்.

பல்கேரியா 30, போலந்து 28, சுலோவாக்கியா 12 என்று மொத்தம் 70 போர் விமானங்களை அனுப்புவதாகத் உக்ரைன் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டென்மார்க், செக் குடியரசு நாடுகளும் உதவிசெய்வதாக அறிவித்துள்ளன.

இந்திய அரசும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!