Monday, February 10, 2025

டிரம்ப் உத்தரவால் நாடு திரும்பும் 18 ஆயிரம் இந்தியா்கள்?

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் உத்தரவுகளால் சுமாா் 18 ஆயிரம் இந்தியா்கள் நாடு திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது ரத்து உள்பட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 12 உத்தரவுகளில் 47-ஆவது அதிபராகப் பதவியேற்ற அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டாா். டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் சட்டவிரோத குடியேறிகளாகி உள்ளனா்.

இதில் இந்தியா்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவா்களை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையில் அமெரிக்க அரசுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Latest news