மகாவீா் ஜெயந்தி, வார விடுமுறை தினங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு என தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இதனை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு இன்று 190 பேருந்துகளும், நாளை மறுநாள் 525 பேருந்துகளும், சனிக்கிழமை 380 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.