ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 12 நாட்களே உள்ள நிலையில், முதற்கட்டமாக 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது.
1200 வாக்காளர்களை கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 20 சதவீதம் கூடுதலாக முதன்மை அலுவலர்கள் சேர்த்து சுமார் 1194 பேர் இடைத்தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.