Sunday, September 7, 2025

சென்னையில் நாளை (செப்.7) 11 புறநகர் ரயில்கள் ரத்து..!

பொன்னேரி பணிமனையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை(செப்டம்பர் 7) இரவு சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே 11 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை/மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை இடையேயான ரயில்கள் செப். 7 ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப். 8 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்குச் செல்லும் ரயில்களும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் ரத்து செய்யப்படுகிறது. செப்டம்பர் 8ம் தேதி அதிகாலை 4 மணிக்குப் பிறகு வழக்கம்போல ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News