Wednesday, February 19, 2025

103 ஆண்டுகள் சிறை தண்டனை : திருவாரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம்(வயது 65). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 12 வயது சிறுமி ஒருவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சதாசிவத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில் சதாசிவம் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்துள்ளார். இதனால் அவர் மீது பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகையில் உள்ள சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை நேற்று திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சதாசிவத்துக்கு 103 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.19 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவி தொகையாக ரூ.7 லட்சம் அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

Latest news