103 வயதான ஸ்வீடிஸ் பெண்மணி பாராசூட்டிலிருந்து
குதித்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
60 வயதானாலே வாழ்க்கை அவ்வளவுதான் என்று சோர்ந்து
போவோர் மத்தியில் அனைவரையும் தன்னம்பிக்கை
கொள்ளச்செய்துள்ளார் இந்த மூதாட்டி.
உலகிலேயே மிக அதிக வயதானப் பெண்மணியான சுவீடன்
நாட்டைச் சேர்ந்த ரூட் லார்சன் தனது குடும்ப உறுப்பினர்கள்
மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பாராசூட்டிலிருந்து குதித்து
அசத்தியுள்ளார். இதன்மூலம் 2017 ஆம் ஆண்டில் ஆல்பிரட் அல்
பிளாஸ்கே என்ற அமெரிக்கப் பெண்மணியின் சாதனையை
முறியடித்துள்ளார்.
லார்சனின் பாராசூட் வீடியோ வலைத்தளங்களில் தற்போது
வைரலாகியுள்ளது.
”இந்தப் பயணம் அருமையாக இருந்தது. நீண்டநாட்களாக
பாராசூட்டிலிருந்து குதிப்பதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன்”
என்கிறார் லார்சன்.
தனது சாதனையை கேக் வெட்டிக் கொண்டாட உள்ளாராம் இந்த
உலகின் மூத்த பெண்மணி.
வெரி ஸ்ட்ராங் லேடி…