https://www.instagram.com/reel/Ca64GdIDATH/?utm_source=ig_web_copy_link
ரயில்போல நீளமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள கார்
அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
1966 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 60 அடி நீளமுள்ள
அந்தக் காரை 100 அடி நீளமுள்ளதாக மாற்றியமைத்து
மகத்தான சாதனை புரிந்துள்ளார் அமெரிக்கர் ஒருவர்.
அந்தக் காரில் நீந்தலாம், ஓய்வெடுக்கலாம், ஹெலிபேடில்
தரையிறங்கலாம், அங்குள்ள மைதானத்தில் கோல்ஃப்
விளையாடலாம். 75பேர் தாராளமாக உட்காரலாம்.
தொலைக்காட்சிகளில் கண்டுகழிக்கலாம். அத்தனை
வசதிகளும் அந்தக் காருக்குள் உள்ளன.
அமெரிக்கன் ட்ரீம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக்
கார் 26 சக்கரங்களுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
துருப்பிடித்துப் பயனற்றுக்கிடந்த இந்தக் காரை 10
ஆண்டுகளுக்குமுன்பு வாங்கிய மைக்கேல் மேனிங் என்கிற
கார் ஆர்வலர், அதனை சாதனைக் கார் ஆக்கி பெருமை பெற்றுள்ளார்.
உலகின் மிக நீளமான இந்தக் கார் அமெரிக்காவின் ஃபுளோரிடா
மாகாணத்தின் டிசர்லாந்து பூங்காவில் உள்ள கார் அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட உள்ளது.
தன்னுடைய ஆசையை உலக சாதனையாக்கி கார் ஆர்வலர்கள்
மட்டுமன்றி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மைக்கேல்
மேனிங்கை வலைத்தளவாசிகள் பாராட்டி மகிழ்கின்றனர்.