குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள 45 ஆண்டுகள் பழமையான கம்பீரா பாலம் இன்று (ஜூலை 9, 2025) காலை சுமார் 7:30 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். மேலும் பலர் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் நிவார நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.