மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.07 அடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.07 அடியாக உயர்ந்ததுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரத்து 277 கன அடியிலிருந்து 10 ஆயிரத்து 53 கன அடியாக சரிந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு -மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 35.39 டிஎம்சியாக இருந்தது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.