ஷங்கர் இயக்கும் படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகை

258
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், ஒரு சில வருடங்களாகத் தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் குறிப்பாகத் தமிழ் சினிமாவை விட தற்போது தெலுகு சினிமாவில் அதிகமாக நடித்து வருகிறார்.


இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுகு படத்தில் கீர்த்தி நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது, மேலும் தமிழ் ரசிகர்கள் இவங்க தமிழ்ப் படங்களில் மீண்டு எப்போது நடிப்பாங்க என்று எதிர்பார்த்த நிலையில்.
சமீபத்தில் வெளிவந்த சாணி காகிதம் படத்தில் ஒரு தைரியமான, பொன்னி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார், இப்படம் விமர்சன ரீதியாகப் பல விதமான கருத்துக்களைப் பெற்று வரும் நிலையில்.


எனவே தற்போது ஷங்கர் இயக்கிவரும் ராம்சரண் 15 என்று கூறப்படும் பெயரிடாத படத்தில் கீர்த்தி ஒரு கதாநாயகியாக நடிக்கிறார், ஏற்கனவே பாலிவுட் பேர் அழகி கியாரா அத்வானி(Kiara advani) ஒரு கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாம் ஷெட்யுலில் நடக்கவிருக்கிறது அதனால் கீர்த்தி சுரேஷ் அப்போது இணைவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

Advertisement