Thursday, December 26, 2024

நீண்ட கால உலக ஆட்சியில் 2 ஆம் இடத்தில் எலிசபெத்! முதல் இடத்தில் யார்?   

இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் நேற்று காலமானார், 96 வயதை எட்டிய  ராணி எலிசபெத் அவர்களின் இயற்பெயர் எலிசபெத் அலெக்சாண்டிரியா மேரி, உலகில் நீண்ட காலமாக ஆட்சி செய்த நபர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் எலிசபெத், முதல் இடத்தில் யார் இடம்பிடித்துள்ளார் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம், 

கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்தின் ராணியாக  2-ம் எலிசபெத் செயல்பட்டுள்ளார், இங்கிலாந்திற்கு மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரசியாகவும் உள்ளார், 

மேலும் ராணியின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்தார், இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள் என்று நான்கு பிள்ளைகள் உள்ளனர், இன்னிலையில் 1952 ஆம்  ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி அரியணை ஏறிய எலிசபெத் 70 ஆண்டுகள் 214 நாட்கள் ராணியாகச் செயல்பட்டுள்ளார், மேலும் 63 ஆண்டுகள் இங்கிலாந்தின் ராணியாக இருந்த விக்டோரியாவின் சாதனையை முறியடித்தார் எலிசபெத், அதிலும் உலகின் நீண்ட காலமாக ஆட்சி செய்த நபர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் எலிசபெத், அதுபோல முதலிடத்தில் 1643 ஆண்டு மே 14-ம் தேதி முதல் 1715 செப்டம்பர் 1-ம் தேதி வரை, சுமார் 72 ஆண்டுகள் 110 நாட்கள் ஆட்சி செய்த 14 ஆம் லுயிஸ் உலகின் நீண்ட நாட்கள் ஆட்சி செய்த நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்

Latest news